துணிவு படத்தின் ப்ரோமோஷனில் நடிகர் அஜித் பங்கேற்கிறாரா ?
‘பிரேம புஸ்தகம்’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் நடிகர் அஜித். 1993-ல் செல்வா இயக்கதில் வெளியான ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது.
அதன் பின்னர் 1995-ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, வில்லன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், அட்டகாசம், வரலாறு, பில்லா, மங்காத்தா, வீரம், விவேகம், வேதாளம், கடைசியாக வெளியான வலிமை படம் வரை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இன்றளவும் திகழ்கிறார்.
தற்போது அஜித், எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருகியுள்ளதால் தற்போது ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்றது வருகிறது. இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் 'துணிவு' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அஜித் பங்கேற்பார் என்று செய்தி வெளியான நிலையில், அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'ஒரு நல்ல திரைப்படமே அந்த படத்தின் சிறந்த ப்ரோமோஷன் ' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையின் மூலம் துணிவு படத்தின் ப்ரோமோஷனில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.