மீண்டும் ஹீரோ அவதாரம் எடுக்கிறாரா நடிகர் பாக்யராஜ்..!!

 

பாரதிராஜாவின் பயிற்சி பட்டறையில் பயின்றவர் நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ் நீண்ட காலம் இயக்குனர் பாரதிராஜாவிடம் கதாசிரியராகவும் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்த பாக்யராஜ் எந்த வித பின்புலமும் இல்லாமல் திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பின் மீது உள்ள ஆர்வம் காரணமாக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அதன் பின்னர் கதாநாயகனாக படிப்படியாக உயர்ந்தவர்.பாரதிராஜா படம் என்றால் எப்படி மண்வாசனை இருக்குமோ அதே போல் பாக்கியராஜ் படம் என்றால் குடும்ப கதையம்சம் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று



அவர் இயக்கி நடித்த அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, சின்ன வீடு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் உள்ளிட்ட படங்கள் எல்லா காலத்திற்கும் எக்காலத்திற்கும் பொருத்தமான கதை அம்சம் கொண்டவை.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் பாக்யராஜ்'3.6.9'என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சினிமா வரலாற்றில் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். ஒரே நேரத்தில் 24 கேமராக்கள், 150 க்கு மேற்பட்ட நடிகர், நடிகைகள் 450 தொழிநுட்ப கலைஞர்களை வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.