மாட்டுக்கும் உனக்கும் ஒரு நொடி தான்... அதுல நீ ஜெய்கிரியா மாடு ஜெய்க்குதா தான் கணக்கு..!! வெளியான ‘பேட்டைக்காளி’ வெப் தொடரின் டிரெய்லர்..!!    

 

ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் இணையத்தொடர் ’பேட்டைக்காளி’. காளைகளை அடக்குபவர்களுக்கும் வளர்ப்பவர்களுக்கும் இடையே உள்ள பெருமை, வீரம், விளையாட்டுத் திறன் ஆகியன ‘பேட்டைக்காளி’யில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டு விளையாட்டின் உணர்வுப்பூர்வமான தருணம் என்றால், அது காளை வளர்ப்பவர்களின் அன்பு மற்றும் அதை விளையாட்டில் அடக்குபவர்களின் ஆக்கிரமிப்பு இவற்றைச் சொல்லலாம். இதை ‘பேட்டைக்காளி’யில் விரிவாகவே காட்சிப்படுத்தியுள்ளனர்.இந்த வெப் தொடரில் கலையரசன் மற்றும் ஷீலா ராஜ்குமார் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த வெப் தொடரை ‘அண்ணனுக்கு ஜெய்’ இயக்கிய ராஜ்குமார் இயக்கியுள்ளார். முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் தயாரிப்பில் இந்த வெப் தொடர் தயாராகியுள்ளது 

சந்தோஷ் நாராயணன் இந்த வெப் தொடருக்கு இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 21-ஆம் தேதி தீபாவளியையொட்டி இந்த வெப் தொடர் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. 

இணைய தொடரின் இயக்குநரான ராஜ்குமார் ‘பேட்டைக்காளி’ உருவாக்கம் குறித்து, “முன்பெல்லாம் மனிதர்கள் காடுகளில் அலைந்து திரிந்தனர். அதன்பிறகு காளைகள், அவர்கள் வாழ்வில் வந்த பிறகுதான் விவசாயத்தையும் காளைகள் வளர்ப்பது குறித்தும் கற்றுக் கொண்டனர்.எனவே, காளைகள் வந்த பிறகுதான் மனிதர்களின் வாழ்வில் கலாச்சாரம் மெல்ல வளரத் தொடங்கியது. ஆதிகாலத்தில் மனிதர்கள் காளைகளை அடக்கியது இப்போதும் நம் கலாச்சார விளையாட்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் நாட்டிலேயே நம் மாநிலத்தில்தான் நடக்கிறது.

நம்முடைய கலாச்சாரத்தில் காளைகளின் முக்கியத்துவம் குறித்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜல்லிக்கட்டு உலகில் இதுவரை சொல்லப்படாத கதைகளை ஆராயவும் இந்த இணையத் தொடரை உருவாக்கியுள்ளோம்” என்றார்.

இந்நிலையில் இந்த வெப் தொடரின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

<a href=https://youtube.com/embed/-ZWD8h0-TOY?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/-ZWD8h0-TOY/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">