'ஜெயிலர்' கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு !
'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'ஜெயிலர்'. விஜய்யின் 'பீஸ்ட்' படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்காக இசையமைப்பாளர் அனிரூத் தாறுமாறாக இசையமைத்து வருகிறார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதையொட்டி படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படபிடிப்பு கடலூரில் நடைபெற்றது. இதில் ரஜினி மற்றும் யோகி பாபு நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி மற்றும் சிவ ராஜ்குமார் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.