‘குண்டக்க மண்டக்க’ பட இயக்குநர் எஸ். அசோகன் காலமானார்..!!
Sep 24, 2022, 07:05 IST
1995-ம் ஆண்டு நெப்போலியன் மற்றும் ரஞ்சிதா நடிப்பில் வெளியான ‘தமிழச்சி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ். அசோகன். அதனைத் தொடர்ந்து பொன்விழா, கம்பன் கழகம், குண்டக்க மண்டக்க, நாகர்கோவில் சந்திப்பு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும் பகவத் கீதன் என்ற மகனும் உள்ளார்கள்.
சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் வசித்து வந்த எஸ்.அசோகன் மாரடைப்பால் காலமானார். சென்னையில் இருந்து அவரது உடல் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டைக்கு எடுத்து வரப்பட்டது.
உள்ளிக்கோட்டையில் உள்ள தெற்கு தெரு இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின் இன்று இரவு இறுதிச் சடங்குகள் நடைபெற்ற உள்ளன. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.