பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே மரணம்!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!

 

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் பிரபல நடிகர் விக்ரம் கோகலே. பாரம்பரியமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது சந்திரகாந்த் கோகலேவும் மராத்தி நாடக நடிகராவார். இவரது கொள்ளுப்பாட்டி துர்காபாய் காமத் இந்தியாவின் முதல் பெண் சினிமா நடிகை ஆவார்.

மராத்தி நாடகத்தில் நடித்து வந்த இவர், 1971-ல் வெளியான ‘பர்வானா’ படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பால கௌ காஷி அங்காய், யேஹி ஹை ஜிந்தகி, பிங்கிரி, ஸ்வர்க் நரக் உள்ளிட்ட பல மராத்தி மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் நடித்துள்ளார்.

2010-ல் வெளியான மராத்தி படமான ‘ஆகாத்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஸ்பிரிண்ட் ஆர்ட்ஸ் கிரியேஷன் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் ராஜேஷ் டாம்பிள் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த படம் டாக்டர் நிதின் லவங்கரே எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டது.

இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாடமியின் சங்கீத நாடக அகாடமியால், கோகலே நாடகத்தில் நடித்ததற்காக 2011-ல் சங்கீத நாடக அகாடமி விருது பெற்றார். 2013-ல், அவர் தனது மராத்தி திரைப்படமான அனுமதிக்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.

இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்த போதிலும் விக்ரமின் இருதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம்  மாலை கோமா நிலைக்கு சென்ற விக்ரம் கோகலே, வென்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு விக்ரம் கோகலே காலமானதாக செய்திகள் பரவிய நிலையில், இதை அவரது மனைவி விருஷாலி மறுத்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ம காலமானார். இவரது மறைவுக்கு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.