விரைவில் ஓடிடியில் வெளியாகும் மாதவனின் ‘ராக்கெட்ரி’..!!

 

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக  கொண்டு உருவான படம் ‘ராக்கெட்ரி - நம்பி விளைவு’. இந்த படம் நம்பி நாராயணனின் வாழ்க்கையில் மறைக்கப்பட்ட பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்துள்ளார். மாதவனுடன் இணைந்து சிம்ரன், ரவி ராகவேந்திர உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஆர். மாதவனின் இயக்குனராக உருவெடுத்துள்ள ராக்கெட்ரி: நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் ஸ்ட்ரீமிங் பிரீமியரை அமேசான் பிரைம் வீடியோ அறிவித்துள்ளதுஆர்.மாதவன், சிம்ரன் மற்றும் ரஞ்சித் கபூர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள ‘‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’’ படத்தில் சூர்யா கௌரவ நடிகராக பங்கேற்றுள்ளார். ஆர்.மாதவன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரைகலர் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.
இந்தியாவிலும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஜூலை 26, 2022 முதல் இத்திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் செய்யலாம்.

இந்த கதையை உலகிற்கு எடுத்துச் செல்வது எனக்கு பெருமை தருவதாக இருக்கிறது" என்று ஆர்.மாதவன் கூறினார். “திரைப்படம் பெற்றுள்ள அபிமானம் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது மற்றும் ஸ்ட்ரீமிங் மூலம் புதிய மைல்கற்களை எட்டுவதைக் கான பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். நம்பி சாரின் இந்த நம்பமுடியாத கதைக்கு முறையான வடிவத்தைக் கொடுத்து வெளிக் கொணர்வது இன்றியமையாத ஒன்று. பலரை உற்சாகப்படுத்தும், அறிவூட்டும், மகிழ்விக்கும் விதமாக இக்கதை அமேசான் பிரைம் வீடியோ மூலம் பல குடும்பங்களைச் சென்றடையவுள்ளது எனக்கு மகிழ்ச்சியூட்டுவதாக உள்ளது.”என்று அவர் மேலும் கூறினார்.

1994 இல் உளவு பார்த்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம், அவரது நேர்மையான சாதனைகள், நாட்டின் விண்வெளிப் பயணத்தின் மீதான அவரது ஆர்வம், ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு குறித்து விக்கும் இக்கதை இறுதியில் தவறுதலாக எவ்வாறு மிகப்பெரிய தனிப்பட்ட குற்றச்சாட்டாக மாறி அவரது வாழ்க்கையின் தொழில்முறை பின்னடைவு ஏற்பட்டது என்பதையும் அதிலிருந்து அவர் எவ்வாறு வெளிவந்தார் என்பதையும் விளக்குகிறது. நடிகரும் இயக்குனருமான ஆர். மாதவனின் சிறப்பான நடிப்பைக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதை இது என்பது மிகையல்ல.