இன்று வெளியாகும் எஸ்.கே 22 படத்தின் முக்கிய அப்டேட்!
  Jul 15, 2022, 06:35 IST   
தமிழ் சினிமாவில் படு பிஸியாக நடித்து கொண்டு வருபவர் சிவகார்த்திகேயன்... இவர் இயக்குனர் மடோன் அஸ்வின் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். மடோன் அஸ்வின் யோகி பாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
 
மடோன் அஸ்வின் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைக்கும் படத்தில் நடிகை சமந்தா அல்லது பாலிவுட் நடிகை கியாரா அத்வானி இருவரில்கதாநாயகியாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 22-வது படமாக உருவாகிறது.
தற்போது சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் இன்று காலை 10.10 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.