தளபதி விஜய் படத்தில் வில்லனாக நடிக்கும் மலையாள பட ஹீரோ..? 

 

லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் தளபதி 67 உருவாகிறது. இதில் விஜய்க்கு வில்லனாக இயக்குநர் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இன்னொரு வில்லனாக நடிக்க சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்தநிலையில் முக்கிய வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தேதிகள் சரியாக அமையாததால், அவர் விலகியுள்ளார். அதனால் தற்போது மலையாள நடிகர் நிவின் பாலியுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.