இந்த உலகத்தில் இருக்கிற உயிர்களிளே... மோசமானவன் மனுஷன் தான்.. வெளியான சசிகுமார் பட டிரெய்லர்..!!
இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயோத்தி’. இந்த படத்தில் போஸ் வெங்கட், ‘குக் வித் கோமாளி’ புகழ், யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மாதேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் உள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
சமூகத்தில் நிலவும் மத ரீதியான பிரச்சனைகளை பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.