புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் தீம் இசையை உருவாக்கிய மான்டி நார்மன் காலமானார்!!

 
1950-ம் ஆண்டுகளில் ஒரு பெரிய இசைக்குழு ஒன்றை அமைத்து அதில் பாடகராக தனது இசைப் பயணத்தை தொடர்ந்தார் மான்டி நார்மன். 

அதைத்தொடர்ந்து கிளிப் ரிச்சர்ட், டாமி ஸ்டீல் மற்றும் பாப் ஹோப் ஆகியோருக்கு பாடல்கள் எழுதிக் கொடுக்கும் பணியை செய்தார். மேலும் நாடக நிகழ்ச்சிகளுக்கும் இசையமைத்ததால் இவரது கவனம் திரையுலகத்தின் பக்கம் திரும்பியது.

அதைத்தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற ‘டாக்டர் நோ’ என்ற திரைப்படத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கான ஹீரோவின் என்ட்ரி உள்ளிட்ட பல்வேறு காட்சிகளுக்கு தீம் மியூசிக்கை இவர் உருவாக்கி உலக அளவில் புகழ் பெற்றார். இந்த மியூசிக் மிகவும் பிரபலமானதாகும்.

இந்த தீம் மியூசிக்கை ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களிலும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வயது மூப்பு காரணமாகவும், உடல்நிலை சரியில்லாமல் போனதால் மான்டி நார்மன் நேற்று காலமானார். இவரது மரணத்தால் அதிர்ச்சியடைந்த திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜேம்ஸ் பாண்டின் மர்மத் தன்மை, பாலியல் வேட்கை, இரக்கமற்ற குணம் என எல்லாவற்றையும் சில இசை நோட்களில் கொண்டுவந்ததில் தனக்குப் பெருமை என ஒரு பேட்டியில் நார்மன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது!