‘மிஸ்டர் இந்தியா’ படத்தின் ஒளிப்பதிவாளர் பீட்டர் பெரேரோ மரண்ம்!! திரையுலகினர் இரங்கல்..!!

 

1929-ல் மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள உட்டானில் பிறந்தவர் பீட்டர் பெரேரோ. இவர், 1963-ல் வெளியான ‘பரஸ்மணி’ படத்தின் மூலம் ஒளிபதிவாளராக பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். 1970-ல் வெளியான ‘சச்சா ஜுதா’ படத்தின் மூலம் ஸ்பெஷல் எஃபெக்ட் படைப்பாளராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து யாரனா (1981), கூலி (1983), மார்ட் (1985), ஷாஹென்ஷா (1988), தூஃபான் (1989) மற்றும் லால் பாட்ஷா (1999) போன்ற சில பாலிவுட் படங்களில் பணியாற்றினார். இது தவிர, அவரது குறிப்பிடத்தக்க பாலிவுட் படங்களில் பசேரா (1981), தில் ஆஷ்னா ஹை (1992), கிலாடியோன் கா கிலாடி (1996), மற்றும் பியார் திவானா ஹோதா ஹை (2002) ஆகியவை அடங்கும். பீட்டர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கடைசி படம் பாகமதி (2005).

மேலும், ரொட்டி (1974), அமர் அக்பர் அந்தோணி (1977), பிரேம் ரோக் (1982), ஷேஷ்நாக் (1990), மற்றும் அஜூபா (1991) போன்ற சில பாலிவுட் படங்களுக்கு பீட்டர் ஸ்பெஷல் எஃபெக்ட் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்.

கடந்த 2000-ம் ஆண்டு முற்பகுதியில் பார்வை நரம்பை சேதப்படுத்தும் நோயான கிளௌகோமாவால் தனது கண்பார்வையை இழந்தார் பீட்டர். 20 வருடங்களாக பார்வை இழந்து வாழ்ந்து வந்த பீட்டர் வயது முதுமை காரணமாக பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலமானார். இவரது மறைவுக்கு பாலிவுட் திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.