ரத்தம் தெறிக்க தெறிக்க உருவாகியுள்ள ‘நான் மிருகமாய் மாற’ டிரெய்லர்..!! 

 

’ராஜவம்சம்’ படத்தை தயாரித்த செந்தூர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘நான் மிருகமாய் மாற’. சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தை ‘கழுகு’ படத்தின் இயக்குனர் சத்ய சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.  

இந்த படத்தில் கதாநாயகியாக ஹரிப்பிரியா நடித்துள்ளார். வில்லனாக நடிகர் விக்ராந்த் நடித்துள்ளார். இவர்களுடன்  மதுசூதனன், துளசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து வருகிறார். 

இந்நிலையில் ரத்தம் தெறிக்க தெறிக்க உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

<a href=https://youtube.com/embed/_coSscEU_ys?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/_coSscEU_ys/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">