அச்சச்சோ... விபத்தில் சிக்கிய குஷ்பு... காலில் பெரிய கட்டு... 

 

90களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ, இவர் ஜோடிப்போடாத நடிகர்களே இல்லை என சொல்லலாம், அந்த அளவிற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் என டாப் நடிகர்கள் பலருடனும் பணியாற்றி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இன்றும் கூட இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக மிக இளமையான தோற்றத்தில் உள்ளார்.

இந்த நிலையில் வெள்ளித்திரை, சின்னத்திரை மட்டுமல்லாது அரசியலிலும் இறங்கி ஒரு கலக்கி வருகிறார். தேசிய கட்சியான பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். நடிகை குஷ்பூ. இந்நிலையில் நடிகை குஷ்பு தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளனர். அதாவது விபத்தில் சிக்கியுள்ள குஷ்பு காலில் பெரிய கட்டுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதனுடன் மோட்டிவேஷனல் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அதில் “ஒரு விசித்திரமான விபத்து உங்களது அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்து வலியில் ஆழ்த்தும் போது என்ன செய்வீர்கள்?. மற்றவர்களைப் பற்றி உறுதியாக தெரியவில்லை, ஆனால், எனது பயணம் தொடரும், சாதிக்கும் வரை நிறுத்தாதே!" என தானது பயணத்திற்கு தேவையான பெட்டிகளின் போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.  இதை பார்த்த ரசிகர்கள் விரைவில் குஷ்பூ நலம் பெற வேண்டும் என வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.