பிரபல பாடகி வாணி ஜெயராம் உட்பட 9 பேருக்கு பத்ம பூஷன் விருது..!!

 

1945 ஆம் ஆண்டு வேலூரில், கலைவாணி-யாக பிறந்து இன்று தன்னுடைய இனிமையான குரலால் வானுயர வளர்ந்து நிற்பவர் தான் இந்த வாணி ஜெயராம். இசை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், டி.ஆர். பாலசுப்ரமணியம், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் கர்னாடக இசையை கற்றவர்.வானொலியில், போடப்படும் பாடல்களை கேட்டு கேட்டு தானும் ஒரு பாடகியாக வேண்டும் என்கிற ஆசையை மனதில் வைத்து அதனை நிறைவேற்றினர்.

இதற்க்கு முக்கிய காரணம் வாணி ஜெயராம் இசை மீது இவருக்கு இருந்த தீரா காதல் தான். ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னர் ஒரு ஆண் இருப்பர் என்பது வாணி ஜெயராம் விஷயத்தில் 100 சதவீதம் உண்மை. மனைவியின் பாடகி ஆசையை நிறைவேற்ற துணையை நின்றார் அவரின் கணவர் ஜெயராம்.

1971-ம் வருடப் புத்தாண்டு தினத்தில் வெளிவந்த ‘குட்டி’ (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசையில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் வாணி ஜெயராம்.

இவரது முதல் பாடலே அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இசையமைப்பாளர்களால் தேடப்படும், முன்னணி பாடகியாக உருவெடுத்தார். ஹிந்தியை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குஜராத்தி, ஓடியா, பெங்காலி என 10க்கும் மேற்பட்ட மொழி பாடங்களை பாடி பிரபலமானார்.இவரின் குரலுக்கே தனி ரசிகர்கள் உண்டு..

குறிப்பாக வாணி ஜெயராம் 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் பாடிய பாடலுக்காக சிறந்த பின்னணி படகிக்கான தேசிய விருதை பெற்றார். இதை தொடர்ந்து தெலுங்கு பட பாடலுக்காகவும் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு, கலை, அறிவியல் ரீதியாக சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான ‘பத்ம பூஷன்’ விருது விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் உட்பட இந்த விருது மொத்தம் 9 பேருக்கு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவருக்கு பல மக்கள்,சினிமா ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்..

அதேபோல் பரதநாட்டியக் கலைஞர் கே கல்யாணசுந்தரம் பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.