'கோப்ரா' படக்குழு வெளியிட்ட போஸ்டர்..!!

 

 'இமைக்கா நொடிகள்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் 'கோப்ரா'. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.ஸ்பை திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பல கெட்டப்புகளில் தோன்ற இருக்கிறார். 

மேலும் இந்தப் படத்தில் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இர்பான் பதான் இந்த படத்தில் துருக்கிய இண்டர்போல் அதிகாரியாக நடித்துள்ளார். 

இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.