ஆர்.ஆர்.ஆர். பட குழுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

 

இயக்குநா் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்.டி.ஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருது நிகழ்வில் ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு கூத்து பாடல் வெற்றி பெற்றது. இந்த பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பாடல் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 

நாட்டு நாட்டு பாடலின் மூலம் கோல்டன் குளோப் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.  கடும் உழைப்பினால் உலக அளவில் நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்த திரைப்படக் குழுவினருக்கும் குறிப்பாக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். மேலும், இந்திய சினிமாவில் வரலாறு படைத்து ஆஸ்கர் பிரிவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள காஷ்மீர் பைல், இரவின் நிழல், ஆர்.ஆர்.ஆர், காந்தாரா, ராக்கெட்டரி போன்ற திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகள் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு பிரதமர் மோடி அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.