சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த ராகவா லாரன்ஸ்..!!

 

நடன இயக்குனர், நடிகர், திரைப்பட இயக்குனர் என பன்முகம் கொண்டவராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் தன்னுடைய பிறந்த நாளை நேற்று கொண்டாடினார் .  இதை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.  அது குறித்த புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியையும் ராகவா லாரன்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளிலும் நல்ல விஷயங்களை செய்ய திட்டமிட்டதாகவும், அந்த வகையில் அன்னதானம் வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.  நடிகர் ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்தவரும் ருத்ரன் திரைப்படத்திலிருந்து Glimpse வீடியோவை நேற்று மாலை அப்பாடக்குழுவினர் வெளியிட்டனர்.