போட்டுத் தாக்கும் பயில்வான் ரங்கநாதன்.. உலகநாயகனுக்கு இவரை பார்த்தா பயமா ?

 

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் நடந்து வருகிறது. வழக்கமாக நடிகர் நடிகையர் மற்றும் செலிபிரிட்டிகளுமே அதிகம் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில், முதல்முறையாக அரசியல்வாதி விக்ரமனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் 

விசிகவைச் சேர்ந்த விக்ரமன், பிக்பாஸ் வீட்டிலேயே மிகவும் நிதானமாணவராகவும், மற்ற போட்டியாளர்களுக்கு நல்ல மரியாதை கொடுத்து அவர்கள் தரப்பு நியாயத்தையும் கேட்டு செயல்படுவதை போன்ற தோற்றம் வெளியில் தெரிகிறது. இதனால் அவர் கடைசி நாள் வரை களத்தில் நிற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விக்ரமனை பார்த்து நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் நடிகர் கமல்ஹாசன் பயப்படுவதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், வீட்டில் எல்லா போட்டியாளர்களையும் எதிர்த்து கேள்வி கேட்கும் கமல், விசிக பிரமுகர் விக்ரமனை மட்டும் எதுவும் கேட்காமல் தமாஷாக பேசி நழுவி விடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் விக்ரமன் தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்டாமல் கமல் தவிர்த்து விடுவதாகவும், இதற்கு முன்பு எந்த சீசனிலும் அவர் இப்படி நடந்துகொண்டதில்லை என்று கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளுக்குள் சண்டை மூட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளதாக கூறினார்.

இதனால் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் மனதிலும் இதுபோன்ற வில்லத்தனம் தான் விதைக்கப்படும் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் அநாகரீகமாக நடந்து கொண்டு சண்டை போடுபவர்களைத்தான் உள்ளே வைத்துள்ளார்கள் என கூறினார்.