மிரட்டலாக வெளியான சாணி காயிதம் டீஸர்..!! இந்த தேதியில் ஓடிடியில் வெளியாகிறது..!!
அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் உருவான பழிக்குப்பழி வாங்கும் பரபரப்பான அதிரடி காட்சிகள் நிறைந்த சாணிக்காயிதம் திரைப்படத்தின் உலகளவிலான வெளியீட்டை ப்ரைம் வீடியோ இன்று அறிவித்தது. ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன்- ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்கள்.
பொன்னி (கீர்த்தி சுரேஷ் தோன்றும் பாத்திரம்) மற்றும் அவளது குடும்பத்தினருக்கு அநீதி இழைக்கப்படும் போது தலைமுறை தலைமுறையாக நீடித்து வந்த சாபம் உண்மையாக மாறத்தொடங்குவதுதான் இதன் கதைக்களம். விளம்பர முன்னோட்ட காட்சிகளில் காணப்படுவது போல அவர் ஒரு கசப்பான கடந்த காலத்தை தன்னோடு பகிர்ந்து கொண்ட சங்கையாவோடு (செல்வராகவன் தோன்றும் பாத்திரம்) இணைந்து எதிரிகளைப் பழிக்குப் பழி வாங்க துடிக்கிறார். இந்த தமிழ் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி மே 6 ஆம் தேதி தொடங்கி தனிப்பட்டு பிரத்யோகமாக பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். மற்றும் இந்தத் திரைப்படம் தெலுங்கில் "சின்னி" என்ற பெயரிலும் மலையாளத்தில் சாணிக்காயிதம் என்ற பெயரிலும் ஒளிபரப்பாகும்.
“சாணிக்காயிதம் இதயத்தைக் கொள்ளைகொள்ளும் அதே அளவில் இதயத்தை கசக்கிப் பிழியும் ஒரு கதை. நீதியைத் தேடி அலையும் ஒரு பெண்ணின்சக்தியின் சாராம்ஸத்தை கண்முன் கொண்டுவருவதில் அருண் மாதேஸ்வரன் அற்புதமாக செயல்பட்டிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் இந்தக் கதைக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் எல்லைகளைக் கடந்த மிகச்சிறப்பான மற்றும் வலிமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்” என்று இந்தத் திரைப்படத்தின் கிரியேட்டிவ் ப்ரொட்யூசர் சித்தார்த் ரவிபதி கூறினார்.” அனைத்து மொழிகளிலும் மே 6 ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியிடப்படும்