சர்தார் படம் படமல்ல.. பாடம்..!!

 

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளி ரிலீசாக கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி சர்தார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர் கார்த்திக்குடன் ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.இந்த படம் தண்ணீர் மாஃபியாவை அடிப்படையாக வைத்து, அதனோடு தொடர்புடைய ஒரு உளவாளியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “இதை படம் என்று சொல்ல முடியாது. நமக்கெல்லாம் இது ஒரு படிப்பினை. இந்தக் கருத்தை வலியுறுத்தி தான் நான் பேசி வருகிறேன். தண்ணீர் மிகப்பெரிய வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டு விட்டது.

உலக உயிர்களின் உயிர் உடைமையை சந்தைப்பொருளாக மாற்றியதிலிருந்து நாம் எவ்வளவு பெரிய பேராபத்தை நோக்கிய பயணித்துக்கொண்டிருக்கும் என்பது புரிய வரும். இந்தப்படம் அதை மிகவும் ஆழமாக விளக்கிச் சொல்லியுள்ளது. இயக்குனர் மித்ரன் தரமான படத்தை உருவாக்கியுள்ளார்.

இரும்புத்திரையிலும் அவர் பொறுப்புடன் ஒரு படத்தை உருவாக்கியிருந்தார். அவரிடம் சமூக பொறுப்புடன் கூடிய ஒரு பார்வை இருக்கிறது. ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் தரமாக உள்ளது. அனைத்தும் நேர்த்தியாக உள்ளது. சர்தார் ஒரு சிறந்த படைப்பு. அன்பும் பாராட்டுகளும்” என்று தெரிவித்துள்ளார்.