ரிலீஸ் ஆவதற்கு முன்பே 26 கோடி வசூல் செய்த சிம்பு படம்..!! 

 

நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்  ‘பத்து தல’. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இப்படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார். இதில் சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தில் சிம்புக்கு கதாநாயகி இல்லை. ஆனால் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.  இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல்கள் தயாராகி வருகிறது. 

இப்படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான அமேசான் கைப்பற்றியுள்ளது. சுமார் 26 கோடிக்கு இந்த உரிமையை அமேசான் பெற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது 

<a href=https://youtube.com/embed/4RVDNfxI2b8?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/4RVDNfxI2b8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">