கண்டிப்பு இல்லாத பசங்க கெட்டு போய்டும் சார்..!! குருதி ஆட்டம்' படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் வெளியானது..!!

 

‘8 தோட்டாக்கள்’ படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் ‘குருதி ஆட்டம்’. இப்படத்தில் அதர்வாகவுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

ஏற்கனவே இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.8 தோட்டாக்கள் படத்தின் இயக்குனர் என்பதால் ரசிகர்கள் படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். ட்ரைலரைப் பார்க்கும் போது அவர் நம்பிக்கையை காப்பற்றுவார் என்ற உறுதி ஏற்பட்டுள்ளது. 

கடந்த 2018ம் ஆண்டே தொடங்கியது. 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இப்படம் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

<a href=https://youtube.com/embed/tqgOBY91IlM?autoplay=1><img src=https://img.youtube.com/vi/tqgOBY91IlM/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">