நாளை வெளியாகும் வீட்ல விஷேசம் படத்தின் பரபரப்பான ஸ்னீக் பீக் ..!!

 

மூக்குத்தி அம்மன் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படைப்பு "வீட்ல விசேஷம்", இப்படம் நாளை( ஜூன் ௧௭) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை பெரிய திரையில் பார்க்க மக்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

எல்கேஜி (2019) மற்றும் மூக்குத்தி அம்மன் (2020) ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கும் மூன்றாவது பெரிய படம். ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி பேனரால் தயாரிக்கப்பட்டு, ரோமியோ பிக்சர்ஸ் வழங்கும் வீட்ல விஷேஷம், மூக்குத்தி அம்மன் படத்திற்குப் பிறகு ஆர்.ஜே.பாலாஜியுடன் என்.ஜே.சரவணன் இயக்கும் இரண்டாவது முயற்சி என்பதால் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கதைக்களத்தை கிண்டலடித்து ஒரு ஸ்னீக் பீக் வெளியிட்டுள்ளனர் படக்குழு.

<a href=https://youtube.com/embed/F-6ucmJDJnc?autoplay=1><img src=https://img.youtube.com/vi/F-6ucmJDJnc/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">


இப்படத்தின் தமிழ் பதிப்பு, ஆயுஷ்மான் குரானா, நீனா குப்தா, கஜராஜ் ராவ், சுரேகா சிக்ரி நடித்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படமான பதாய் ஹோவின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.