அமேசான் பிரைம்யில் நாளை வெளியாகிறது சூப்பர் ஹிட் திரைப்படம்..!!

 

கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியான படம் 'காந்தாரா' . முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது.

இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து இதனடிப்படையில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் 'காந்தாரா' திரைப்படம் வெளியிடப்பட்டது.

தற்போது அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் பாராட்டினர். இந்த நிலையில், 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திரையரங்கில் வெறிகரமாக ஓடிகொண்டிருக்கும் 'காந்தாரா' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது அதாவது படம் நாளை நவம்பர் 24-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

putting an end to all the wait!!! #KantaraOnPrime, out tomorrow@hombalefilms @shetty_rishab @VKiragandur @gowda_sapthami @AJANEESHB @actorkishore pic.twitter.com/HBsEAGNRbU

— prime video IN (@PrimeVideoIN) November 23, 2022