‘சூர்யா 42’ படத்தின் சூப்பர் அப்டேட்..!!

 

சூரரைப் போற்று, ஜெய் பீம் என வரிசையாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சூர்யா, தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘சூர்யா 42’. இப்படத்தைத் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஶ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடிக்கிறார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்டது. படக்குழு சமீபத்தில் கோவா ஷெட்யூலை முடித்துள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 26-ம் தேதி முதல் சென்னை மற்றும் புதுச்சேரியில் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில், சூர்யாவும் திஷாவும் கலந்து கொள்வார்கள் என்றும், இங்கு ஷூட்டிங் முடிந்த பின்னர், அடுத்தகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கும் என்றும், மூன்று வெவ்வேறு நாடுகளில் படப்பிடிப்பை நடத்த உள்ளதாக படக்குழு வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சூர்யா 42-ன் முதல் பாகம் 160 முதல் 170 நாட்கள் வரை படமாக்கப்படும். முதல் பாகம் வெளியான பிறகு இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பை தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.