சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் மீண்டும் ரீ-ரிலீஸ்..? எந்த படம் தெரியுமா ? 

 

 2002-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘பாபா’ இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார்.மக்களிடத்தில் அதிகமான வரவேற்பு இருந்தது.ரஜினியின் சூப்பர் ஹிட் இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார்.

கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இந்நிலையில், தற்போது இந்தப் படம் மீண்டும் புதுப்பொலிவுடன் விரைவில் திரையரங்கிற்கு தயாராகி உள்ளது. இதற்காக புதிய கோணத்தில் இந்தப் படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளதாம். முன்பை விட பார்ப்பதற்கு விறுவிறுப்பாக படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாடல்கள் அனைத்தும் ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு உள்ளது. விரைவில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.