வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல காமெடி நடிகரின் நிலை..!! அப்படி என்ன நடந்தது ?

 

கடந்த 2003ல் வெளிவந்த பிதாமகன் என்ற படத்தின் மூலம் இயக்குனர் பாலாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் தான் கருப்பு. பிதாமகன் படத்தில் கருப்பு கஞ்சா விரும்பியாக நடித்திருப்பார். இதனால் அவரது பெயருடன் கஞ்சாவும் சேர்ந்துகொண்டு கஞ்சா கருப்பு என்றே நிலைத்து விட்டது.

இந்த படத்திற்கு பிறகு, அதே ஆண்டில் அமீர் இயக்கத்தில் வெளியான ராம் திரைப்படத்தில் வாழவந்தான் என்ற கேரக்டரில் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பிறகு விஜயுடன் சிவகாசி,விஷாலுடன் சண்டக்கோழி, அஜித்துடன் திருப்பதி என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தார்.

இதற்கிடையே, 2010 இல் டாக்டர் சங்கீதா என்பவரை கஞ்சா கருப்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர், 2014-ல் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை சொந்தமாக தயாரித்துள்ளார்.

ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகாததால், இழப்பு ஏற்பட்டு சொந்த வீட்டை விற்றுவிட்டு, வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்ததாக கஞ்சா கருப்பு வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய கஞ்சா கருப்பு, “படம் தயாரித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று எனக்கு சிலர் ஆலோசனை சொன்னார்கள். ஆனால் நான் தான் அதை கேட்கவில்லை. படம் பாதி முடிந்தபோதுதான் எனக்கு அது புரிந்தது.கடைசியாக நான் உழைத்து வாங்கிய பாலா–அமீர் இல்லம் என்ற எனது சொந்த வீட்டை விற்று விட்டு, இப்போது 20,000 ரூபாய்க்கு வாடகை வீட்டில் குடியிருக்கிறேன் என கூறியுள்ளார்.