சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கு சூப்பர் செய்த சொன்ன டைரக்டர்..!! 

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை மற்றும் திரைக்கதை எழுதிய படம் பாபா.கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரஜினியின் சூப்பர் ஹிட் இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார். 

 இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, ரியாஸ்கான், எம்.என்.நம்பியார், ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்த படம் மீண்டும் புதிய பொலிவுடன் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்த புது படத்துல 13 சீன் புதுசா இணைச்சிருக்காங்களாம் .மேலும் VFX சவுண்ட் குவாலிட்டி கலர் கரெக்ஷன் போன்ற புது பொலிவுடன் வரப்போகுதாம் 

அப்ப சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு செம விருந்து காத்துகிட்டு இருக்கு.இந்த படம் சூப்பர் ஸ்டார் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி வெளிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது