வேற லெவலில் மிரட்டும் அவதார் 2 படத்தின் இரண்டாவது டிரெய்லர்..!!

 

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியான 3டி படம் அவதார்.வேற்று கிரகத்திற்கு மனிதர்கள் செல்வதால் ஏற்படும் விளைவுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

படத்தின் பிரமிக்க வைக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள், சென்டிமெண்ட் என அனைத்தும் வேற லெவெலில் இருந்ததால் வசூலை வாரிக் குவித்தது.

இந்நிலையில், சரியாக 13 ஆண்டுகள் கழித்து அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இரண்டாம் பாகத்திற்கு “அவதார்: தி வே ஆப் வாட்டர்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகள் உள்பட, உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அவதார் படத்தின் முதல் பாகம் காடுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் பாகம் தண்ணீரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிறச் செய்த நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது.

<a href=https://youtube.com/embed/nEY8HD5UnWY?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/nEY8HD5UnWY/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">