‘லத்தி’ படத்தின் ஸ்டைலிஷ் தீம் பாடல் வெளியானது..!!

 

அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் விஷால் தற்போது லத்தி படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இப்படத்தில் நடிகை சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார். த்ரில்லர் போலீஸ் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் விஷால் சி.முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் விஷால் நடித்துள்ளார். விஷாலின் நெருங்கிய நண்பர்களான ராணா மற்றும் நந்த இருவரும் ராணா தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். 

தனது பத்து வயது மகளுடன் எதிரிகளால் சூழப்பட்ட ஒரு கட்டடத்தில் மாட்டிக் கொள்ளும் காவலர் அந்த ஆபத்திலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது தான் கதையாம். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

தற்போது லத்தி படத்தின் முதல் சிங்கிள் ‘தோட்டா லோட் ஏஜ் வெயிட்டிங்’ யூடியூப்பில் வெளியிடப்பட்டது. இப்படம் விரைவில் பண்டிகை நாளில் வெள்ளித்திரைக்கு வரவுள்ளது.

<a href=https://youtube.com/embed/DfeSRu9RPBs?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/DfeSRu9RPBs/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">