விஜய் சேதுபதி போலீஸ் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கும் ‘டிஎஸ்பி’ படத்தின் டிரெய்லர் வெளியானது ..!!
விஜய் சேதுபதி போலீஸ் கதைக்களத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘டிஎஸ்பி’.இப்படத்தில் வாஸ்கோடகாமா என்ற மிரட்டலான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இந்த படத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மிஸ் இந்தியா அழகி அனு க்ரீத்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரபாகர், ‘குக் வித் கோமாளி’ புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துக் கொண்டு படத்தின் டிரெய்லரை வெளியிட்டார்.