ரசிகர்கள் கொண்டாடும் விதமாக வெளியாகியுள்ள விருமன் படத்தின் ட்ரைலர்..!! 

 

கொம்பன் படத்தை அடுத்து இரண்டாவது முறையாக  இயக்குனர் முத்தையா மற்றும் கார்த்தி கூட்டணி விருமன் படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இந்தப் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இந்த படம் தந்தை மகன் உறவை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளது. விருமன் படத்தில், அதிதி சங்கர், ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ், ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. 

இந்த விழாவில் விருமன் படத்தின் டிரைலரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார். அடிதடி சண்டை அதிரடி பாடல்களுடன் வெளியான இந்த டிரைலர் தரமாக உள்ளது. இந்த டிரைலரை பார்த்த ஷங்கர் எதிர்பார்த்ததை விட டிரைலர் சிறப்பாக இருக்கு, வெற்றி கண்ணில் தெரிகிறது என்றார்.

<a href=https://youtube.com/embed/aRx4-fsJ5uE?autoplay=1><img src=https://img.youtube.com/vi/aRx4-fsJ5uE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">