வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

 

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தோழா, மஹரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.

 தமன் இசையமைக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா, ஷண்முகம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் பொஙகலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் களமிறங்க இருக்கிறது.

இந்த படத்தின் ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’ மற்றும் ‘சோல் ஆஃப் வாரிசு’ பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்ப்பு பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் பொங்கல் தினத்தன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் முன்னர் தில் ராஜு பேசியதை சுட்டிக்காட்டி இனிமேல் பண்டிகை காலத்தில் வெளியாகும் டப்பிங் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும் நேரடி தெலுங்கு படங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுக்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

வாரிசு படத்தை 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியிட படக்குழு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது, அதே தினத்தில் தெலுங்கு திரையுலகின் சில முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியிட திட்டமிட்டிருந்ததை நினைத்து ஏற்கனவே தயாரிப்பாளர் கவலையில் இருந்துவந்த நிலையில் தற்போது லுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் வெளியிட்ட அறிக்கை அவரை மேலும் கவலையடைய செய்திருக்கிறது.