துணிவு படத்தில் நீக்கப்பட்ட வார்த்தைகள் இது தான்..!!
அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது. அஜித் நடித்துள்ள 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் இரவு வெளியானது. ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்திலேயே 30 மில்லியன் பார்வைகளை கடந்து இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் துணிவு படத்தின் சென்சார் பணிகள் முடிந்திருக்கிறது. ஆபாச வார்த்தை இடம்பெற்றுள்ள இடங்களில் படக்குழுவினர் மியூட் செய்துள்ளனர். வட மாநிலத்தவர்களை வடக்கன்ஸ் என்று கூறும் விமர்சனம் தமிழகத்தில் உள்ளது. அந்த வார்த்தையை தற்போது வேறு பொருள் தரும் வகையில் மாற்றி இருக்கிறார்கள். மேலும், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘காசேதான் கடவுளடா’ பாடலில் ‘காந்திக்கும்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தப் படத்துக்கு அனைவரும் பார்க்கும் வகையில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதோடு, 2 மணி நேரம் 25 நிமிடங்கள் 45 ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதும் தணிக்கை விவரத்தில் தெரியவந்துள்ளது.. ‘துணிவு’ படத்திற்கு தணிக்கை துறை அனுமதி வழங்கிவிட்டதால் திரையரங்கில் வெளியிடும் பணிகளில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.