கேஜிஎஃப் புகழ் யாஷின் அடுத்த படம் இது தான்..!!  

 

‘கேஜிஎப்’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான ஹீரோவாக மாறியுள்ளார் நடிகர் யாஷ். சீரியல்களில் நடித்து வந்த அவர், தனது கடின உழைப்பால் மாஸ் ஹீரோவாக மாறியுள்ளார். தற்போது பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ள அவர் திரைப்படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

நேற்று ஜனவரி 8-ஆம் தேதி நடிகர் யாஷ் பிறந்தநாள். இதையொட்டி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். அதேநேரம் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக புதிய பட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி இந்த படம் சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோன்று இந்த படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் நிறைந்திருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தை ‘மாஃப்டி’ படத்தின் தயாரிப்பாளர் நர்த்தன், இயக்குவார் என கூறப்படுகிறது. இந்த படத்தையடுத்து கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றிலும் யாஷ் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.