பிரபல நடிகரின் பிறந்தநாளன்று வெளியாகும் லத்தி படத்தின் ட்ரைலர்..!!
நடிகர் விஷால் நடித்து திரையில் வெளிவர காத்திருக்கும் படம் 'லத்தி'. போலீஸ் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கீழ்நிலை காவலராக விஷால் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது.
கீழ்நிலை காவலராக இருக்கும் ஒரு மனிதன், தனது மகனை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. விஷாலின் நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகியோரது ராணா பிலிம் புரொடக்ஷ்ன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.
இந்த படத்திற்காக மூன்று மொழிகளில் நடிகர் விஷால் டப்பிங் கொடுத்துள்ளார். தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதால் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நிலையில் இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளான வரும் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு படத்தின் டிரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.