3 பாகங்களாக உருவாகி இருக்கும் பிரமாஸ்திரா படத்தின் ட்ரைலர் வெளியீடு..!! 

 

ஹிந்தியில் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் பிரமாஸ்திரா. தமிழில் பிரம்மாஸ்திரம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. 

இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜூனா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்சன்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் ரன்பீர் சிங் சிவனின் அவதாரமாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 3 பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

<a href=https://youtube.com/embed/kxYZLzOzUDI?autoplay=1><img src=https://img.youtube.com/vi/kxYZLzOzUDI/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">