ரெட் ஜெயண்ட் மூவீஸ் மீது வாரிசு பட தயாரிப்பாளர் பகீரங்க குற்றச்சாட்டு..!! 

 

தோழா, மஹரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.

தமன் இசையமைக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா, ஷண்முகம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் பொஙகலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் களமிறங்க இருக்கிறது.

இதனால், இரண்டு படங்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸாவதால், இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் இந்த பொங்கலை வாரிசு பொங்கலாகவும், துணிவு பொங்கலாகவும் கொண்ட ரெடியாக இருக்கின்றனர்.

ஆனால், ஏறத்தாழ நான்கு மாதங்களுக்கு முன்பே துணிவு படத்தின் பிஸ்னஸ் விவகாரத்தை தொடங்கிய போனி கபூர், தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸை அமைச்சர் உதயநிதிக்கு சொந்தமான நிறுவனமான ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ நிறுவனத்திடம் கொடுத்துள்ளார். இதனால் பெரும்பாலான தியேட்டர்களை தங்கள் வசப்படுத்தி வைத்திருப்பதால், துணிவுக்கு நிகரான தியேட்டர்கள் கிடைப்பது சிக்கலாகி உள்ளது.

“தமிழ்நாட்டில் துணிவு படத்துக்கு நிகரான தியேட்டர் வாரிசு படத்துக்கு கிடைக்கவில்லை. பல்வேறு புள்ளிவிவரங்களின்படி விஜய் தமிழ்நாட்டின் நம்பர் 1 ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். ஆனால், அஜித்தின் துணிவு படத்தை ரிலீஸ் செய்யும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், துணிவு படத்திற்கு அதிக தியேட்டர்களை லாக் செய்துவிட்டு, வாரிசுக்கு போதுமான தியேட்டர்களை கொடுக்க மறுக்கின்றனர். துணிவுக்கு நிகராக வாரிசை ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்களை ஒதுக்கினாலே போதும்” என்று கூறியிருக்கிறார்.