தளபதி விஜய்க்கு மறக்க முடியாத நாளில் வெளியாகும் ‘வாரிசு’ இரண்டாவது சிங்கிள்..!!

 

தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி மாதம் 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் யூட்யூப்பில் வெளியாகி 77 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்நிலையில்,நாளை 4-ம் தேதி மாலை 4 மணிக்கு ‘வாரிசு’ படத்தின் இரண்டாவது பாடலான ‘தீ’ வெளியாக உள்ளதாக, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தெரிவித்துள்ளது. இதையடுத்து விஜய்யின் ரசிகர்கள் #TheeThalapathy என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.