வெளியானது நானே வருவேன் படத்தின் வீரா சூரா பாடல்..!!

 

செல்வராகவன்- தனுஷ் கூட்டணிக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. தற்போது மீண்டும் இருவரும் 'நானே வருவேன்' படத்திற்காக இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். யோகிபாபு, இந்துஜா ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

'நானே வருவேன்' படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நடிகை எல்லிஅவர்ராம் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  

இந்நிலையில் நானே வருவேன் திரைப்படத்தின், ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.