ஒரே ஒரு டிரக்கை வைத்து தொழில் தொடங்கி 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய ஒரு தொழிலதிபரின் கதை தான் விஜயானந்த்..!

 

வி ஆர் எல் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரே ஒரு டிரக்கை வைத்து தொழில் தொடங்கி 4300 வாகனங்களுக்கு சொந்தக்காரராக மாறிய ஒரு தொழிலதிபரின் வாழ்க்கை தான் விஜயானந்த் திரைப்படம். பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் இம்மாதம் ஒன்பதாம் தேதியன்று தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என‌ இந்திய மொழிகளில் வெளியாகிறது.

ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனான விஜய் சங்கேஸ்வர் கதாபாத்திரத்தில் நிஹால் நடித்திருக்கிறார். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.

 இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய படத்தின் நாயகன் நிஹால், ஒரு தலைமுறைக்கு நம்பிக்கை தரும் மிகப்பெரும் சாதனையாளராக நான் நடிப்பது பெருமை. நாம் எல்லாம் சாதாரண மனிதர்கள் லீவு நாளில் ஓய்வெடுப்போம் ஆனால் இவர் எத்தனையோ ஆண்டுகள் ஓய்வில்லாமல் உழைத்திருக்கிறார். வாழ்வில் வெற்றிபெற விரும்பும் அனைவருக்கும் இது ஒரு பாடம் என்றார். இதனை திரைப்படமாக எடுப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர் என்றார்.

<a href=https://youtube.com/embed/2wmt_a4L4oM?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/2wmt_a4L4oM/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">