வா தலைவா,தலைவா தலைவா - மாஸாக வெளியான வாரிசு ட்ரைலர்..!! 

 

விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்டேஸ்வரா நிறுவனம் சார்பில் தில் ராஜூ இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். 

குடும்ப உறவுகள் குறித்து பேசும் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேநேரம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தமிழகம் முழுவதும் இப்படத்தை வெளியிட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. வாரிசு’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த டிரெய்லர் சற்று முன் வெளியானது .

<a href=https://youtube.com/embed/9fux9swQ5AQ?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/9fux9swQ5AQ/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">