என்னது..!! பிரபல நடிகை நித்யா மேனன் கர்ப்பமா? போட்டாவால் குழம்பிப்போன ரசிகர்கள்..!

 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் தான் நடிகை நித்யா மேனன். இவர் தமிழில் நானி நடித்த வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு நித்யா மேனன் 24, ஓகே கண்மணி, மெர்சல், காஞ்சனா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அவர் நடித்த அந்த கேரக்டரை பார்க்கும் போது நமக்கும் ஒரு தோழி கிடைக்காத என்று ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.

நடிகை நித்யா மேனன் சமீபத்தில் ஒரு படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரக்னன்சி கிட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குழப்பி இருந்தார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நித்யா மேனன், அவ்வப்போது தனது கிளாமரான மற்றும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ஃபாலோயர்களின் லைக்ஸ்களை பெற்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாவில், கர்ப்பிணியாக ஒரு படத்தில் நடித்து வரும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தான் கர்ப்பிணியாக இருக்கும போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளதால் ரசிகர்கள் அதுக்குள்ள இவ்ளோ பெரிய வயிறா… என கமெண்ட் அடித்து வருகின்றனர்.