இது என்னபா புது ட்விஸ்ட்..!! ஹன்சிகா திருமணம் செய்து கொள்வது அவரது தோழியின் கனவரையா..? 
 

 

இந்தி டிவி நிகழ்ச்சிகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜயோடு வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, அரண்மனை,  ஆம்பள, ரோமியோ ஜூலியட், போகன் என பல படங்களில் நடித்தார்.

இவர் சமீபத்தில் தன்னுடைய நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான சோகேலை திருமணம் செய்யவுள்ளதை சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உறுதிப்படுத்தியிருந்தார். மேலும், இவர்களது திருமணம் வருகிற டிசம்பர் மாதம் 04-ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சோகேலுக்கும் ஹன்சிகாவின் தோழிக்கும் ஏற்கனவே திருமணமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தொழிலதிபர் சோகேல் கடந்த 2016-ஆம் ஆண்டு ஹன்சிகாவின் தோழி ரிங்கு என்பவரை திருமணம் செய்ததாகவும் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றதாகவும் செய்தி பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர்களின் திருமண நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.