7000 வருஷம் முன்னாடி இருந்த சரித்திரத்தை எங்கிருந்து தேடி எடுப்ப..? வெளியான ராம் சேது ட்ரைலர்..!!
அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமர் பாலம்’. இந்த படத்தை அபிஷேக் சர்மா என்பவர் இயக்கியுள்ளார்.
ராமர் பாலத்தை கருவாக வைத்து அபிஷேக் சர்மா இயக்கியுள்ள இந்த படத்தில் ஜாக்குலின் பெர்ணான்டஸ், நாசர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ராமாயணத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சென்று சீதையை ராமர் மீட்டார் என்பது வரலாறு. அப்போது கடல் வழியாக செல்வதற்கு மிதக்கும் பாலம் ஒன்றை ராமர் கட்டியதாக சொல்லப்படுகிறது. 7 ஆயிரம் வருடத்திற்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பாலம் இன்னமும் இருப்பதாக பேசப்படுகிறது. இந்த பாலத்தை கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாக படத்தில் நடித்துள்ளார் அக்ஷய் குமார்.
இந்த படம் வரும் 25ம் தேதி இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.