"சந்திரமுகி - 2" படத்தில் ரஜினி பதிலாக நடிக்கும் நடிகர் இவரா? 

 

கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் 'சந்திரமுகி'. 'சிவாஜி புரொடக்ஷன்' தயாரித்திருந்த இப்படத்தில் பிரபு, ஜோதிகா, நயந்தாரா வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். பி வாசு இயக்கத்தில் உருவாகும் இந்த படம் வேட்டையன் மற்றும் சந்திரமுகி இடையேயான கதைக்களத்தை கொண்டு உருவாகவுள்ளது.

இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் லைக்கா தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.