பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யார்? விஜய்யா?.. அஜித்தா?

 

பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்திருக்கும் ‘வாரிசு’ மற்றும் அஜித் நடித்திருக்கும் ‘துணிவு’ ஆகிய திரைப்படங்கள் நேற்று முன்தினம் வெளியாகி உள்ளன. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்.

அஜித், விஜய் படங்களுக்கு எப்போதுமே முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் வாரிசு திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.26.5 கோடி வசூலித்துள்ளது முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன அஜித்தின் துணிவு படம் உலகளவில் ரூ.26 கோடி வசூலித்து நூலிழையில் முதல் இடத்தை நழுவவிட்டுள்ளத வாரிசு மற்றும் துணிவு இரண்டும் இணைந்து முதல் நாளில் 50 கோடி ரூபாய் வசூல் செய்தன.

சென்னையைப் பொறுத்தவரை துணிவு திரைப்படம் முதல் நாளில் ரூ.3.75 கோடியும், வாரிசு திரைப்படம் ரூ.3.95 கோடியும் வசூலித்து உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் துணிவு படம் தான் அதிகளவு வசூல் ஈட்டி உள்ளது. அப்படம் முதல் நாளில் ரூ.19 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ளது. ஆனால் வாரிசு படம் தமிழ்நாட்டில் ரூ.17 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. கேரளாவில் இப்படம் ரூ 4.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் துணிவு படத்தின் வசூல் அதிகரித்ததற்கு முக்கிய காரணம், இப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு திரையிடப்பட்டது தான். ஆனால் வாரிசு படத்தின் முதல் காட்சி 4 மணிக்கு தான் திரையிடப்பட்டது. இதனால் வாரிசு படத்தை விட துணிவு படத்துக்கு ஒரு ஷோ அதிகமாக கிடைத்தது. இதன்காரணமாகவே துணிவு படம் தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், துணிவு திரைப்படம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் வெளியானது. ஆனால் வாரிசு படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரிலீஸ் ஆகவில்லை. அப்படத்தின் தெலுங்கு படமான ஆன வாரசுடு திரைப்படம் வருகிற ஜனவரி 14-ந் தேதி தான் அங்கு ரிலீசாக உள்ளது. அப்படி இருந்தும் வாரிசு திரைப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் துணிவை விட அதிக வசூலை அள்ளி உள்ளது திரையுலகினர் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜனவரி 11 அன்று வெளியான அஜித்தின் துணிவு படத்தை ஒப்பிடும் போது விஜய் நடித்த வாரிசு ஆஸ்திரேலியாவில் சிறப்பாக வசூல் செய்து உள்ளது. வாரிசு $142,010 பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்துள்ளது, அதே நேரத்தில் துணிவு $59,143 வசூலிக்க முடிந்தது.