சன் டிவி சமையல் நிகழ்ச்சியில் யூடியூப் புகழ் டாடி ஆறுமுகம்..!!
 

 

சன் டிவியில் புதியதோர் சமையல் நிகழ்ச்சி ஒன்று ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான காரக்குழம்பு கனி தொகுத்து வழங்குகிறார். இயக்குனர் அகத்தியனின் மகளான இவர், ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார். ஆனால் போதிய வாய்ப்பு இல்லாததால் சில தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். அதன்பிறகு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் இவர் பேசிய தமிழும், சமையலும் மிகவும் பிரபலம். நிகழ்ச்சியில் விதவிதமான ரெசிபிகளை செய்து நடுவர்களை அசர வைத்தார் கனி.

இந்நிலையில் இவர் தொகுத்து வழங்கும் சமையல் நிகழ்ச்சியில்,இந்த வார சிறப்பு விருந்தினராக யூடியூப் புகழ் டாடி ஆறுமுகம் கலந்துக்கொள்கிறார். 

கலகலப்பான இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே சன் டிவியில் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தோல்வி சந்தித்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.