இணையத்தை வைரலாகும் புகைப்படம்..! யார் இந்த குழந்தை!

 

இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், யார் இவர் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். கையில் பந்து வைத்து விளையாடி கொண்டிருக்கும் இந்த குழந்தை வேறு யாருமில்லை கன்னட திரையுலகின் முன்னணி ஹீரோ யாஷ் தான்.

ஆம், கன்னட சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, பின் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, கே.ஜி.எப் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் யாஷ்.

 

 

இவருடைய குழந்தை பருவ புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கே.ஜி.எப் 2 திரைப்படம் தான் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்தது.

இப்படம் உலகளவில் ரூ. 1200 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. அடுத்ததாக யாஷ் நடிப்பில் டாக்சிக் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.